Pages

Sunday, 1 May 2011

தமிழ்மணம் கடும் அதிர்ச்சி - காப்பி அடித்து சிக்கினர் பிரபலபதிவர்கள்


யார் சிறந்த பதிவர்?
வடிவேலை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் என்ற பதிவு
ஈயடிச்ச காப்பி என்ற விதத்தில் இருவரும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யார் யாரை பார்த்து காப்பி அடித்தார்கள் என்ற முடிவை வாசகர் இடத்தில் விட்டு விடுகிறோம்.

வேடந்தாங்கல் கருண்-http://sakthistudycentre.blogspot.com/2011/05/blog-post_01.html

விவசாயி -http://kavinthan.blogspot.com/2011/05/blog-post.html

 திறமைக்கு அளவே! இல்லை.

பதிவை எப்படித்தான் பத்து நிமிஷத்தில் காப்பி அடித்தார்களோ! உலகமகா பதிவர் என்ற பட்டம் கொடுக்கிறோம். இனியாவது திருந்துங்க
  
பதிவர்களின் 'பிற'ர் பலத்தை கருத்தில் கொண்டும் முழுப்பெயர்களை ஊகிக்க சில பெயர் டிப்ஸ்:

1.மனோ ரஞ்சித பூ
2.தெரு கவிஞர்
3.நிரந்திர தமிழ்மண தலைவர்
4.பாட்டு ரசிப்பவர்
5. மாத்தி யோசிக்காத பின்னூட்ட அவசரக்குடுக்கை
6.சகதியில் உருளும் சாமி
7. டா போட்டு கால் டி சாப்பிடுவர்
8.காப்பி பேஸ்டில் சரணாலாயம் அமைத்தவர்

இவர்கள் அனைவரும் மறுமொழி என்ற பெயரில் பின்னூட்டப்பகுதியில் அடிக்கும் கூத்து கொஞ்சம் நஞ்சம் அல்ல.இவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது தங்களை குறுக்குவழியில் பிரபலப்படுத்துவது தான்.

இவர்களின் பின்னூட்டப்பகுதியிலிருந்து கீழ்கண்ட முடிவுகள் தொகுக்கப்படுகின்றன

1.இவர்களுக்கு பிறரால் ஓட்டு வரவேண்டியிருக்கிறது.நண்பர்களின் பதிவின் உண்மைநிலையை  விமர்சிப்பதன் மூலம் அது பாழ்பட்டு விடுமோ என்கிற அச்சம்.

2.நண்பர்களை விமர்சனம் செய்வதன்மூலம் அவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வார்கள் என்ற தவறான கணிப்பு

3.குறைகளை வெளிப்படுத்தியப் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர் கடுமையாக தம்மை விமர்ச்சித்தால் அதை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத பரிதாபம்.

4.இது நாள் வரை நன்றாக 'வடை' மற்றும் 'பாயாசம்' போட்ட நண்பர்கள் தம்மை விமர்ச்சிக்க தொடங்கி விடுவார்களோ என்ற பயம்.


இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்...
அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதலாம்...

இதில் யாரையும் கேவலப்படுத்துவது நோக்கம் அல்ல.பின்னூட்டப்பகுதியை கேவலப்படுத்துவர்களைப்பற்றிய விமர்சனம்.

பதிவுலகில் தனிமனித தாக்குதல்,சினிமா,காப்பி பேஸ்ட் என்ற வகையில் ஏதனும் ஒரு வகையில் கடுமையாக விமர்சனத்தை வெளிப்படுத்தவர்கள் மேலே உள்ள பதிவர்கள்.அவர்களின் சொந்த பதிவில் யாருக்கும் தலையிட உரிமையில்லை. அதை விமர்சிப்பது பதிவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும்.அதே சமயத்தில் பின்னூட்டம் என்ற பகுதி குறிப்பிட்ட பதிவிற்காக பிறரின் சுதந்திரமான கருத்துக்கள் பதிவிட பதிவர்களால் அனுமதிக்கப்பட்ட பகுதி.

அந்த கருத்து சுதந்திரத்தில் இவர்களின் இம்சை தரும் வரம்புமீறிய கிண்டலும், கேலியும் தலையிடுவதாக அமையும் போது இந்த பின்னூட்டப்புலிகளுக்கு விமர்சனம் அவசியமாகிறது.

வாசகர்களே! இவர்கள் இனிமேலும் இந்த மோசமான நடைமுறையை கைவிடாவிட்டால் நமது 49 (0) வாக உள்ள தமிழ்மணம் மைனஸ் ஓட்டு இட தயார் ஆகுங்கள்...

இரண்டாம் பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது...

Tuesday, 26 April 2011

ஜூ.வி - ஐயோ! ஆனந்த விகடனை காணவில்லை

தற்போது கடைகளில் ஜுவி மற்றும் ஆனந்த விகடன் புத்தகங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அது பற்றி எமது செய்தியாளர்  தரும் நேரலை:

பேரு வேண்டாங்க... நெறைய புஸ்தகங்களை எதோ வலைப்பூ கட்றதுக்கு வாங்கிட்டு போறாங்களாம்.சரி.. சாமிக்கு பூ கட்டுவாங்கன்னு நாங்களும்
 மொத்தமா கொடுத்துடுவோம்.எதுக்கு கேக்கிற?

தற்போது கிடைத்த தகவலின் படி சில வலைப்பதிவர்கள் ஜு.வி மற்றும் ஆனந்த விகடனில் வரும் விஷயங்களை அப்படியே , ஈயடிச்ச காப்பி அடித்து போட்டு விடுகிறார்களாம். இதனால்,வாரவாரம் தமிழ்மணத்தில் குறிப்பிட்ட சிலரே முன்னணியில் வருகிறார்களாம். இதனால், சக பதிவர்கள் ஏகத்துக்கும் கோபத்தில் இருக்கிறார்கள்.

சில பதிவர்கள் சொந்த சரக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதாக புலம்பி தள்ளிகிறார்கள். இது தான் இவர்களின் நடை என்றால் பேசாமல் விகடனில் நிருபர்களாக சேர்ந்து விட வேண்டியது தானே! இது மற்றொரு தரப்பினர் வாதம்.

சிலரோ! இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை நாளடைவில் இது 'டப்பா'  வலைப்பூ என ஒதுக்கிவிடுவார்கள் என ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆனால், சிறப்பாக எழுதினாலும், விகடனின் மறுபிரதியில் பெயர் வாங்கினால், வலி இருக்கத்தானே செய்யும்.
சம்பந்தப்பட்ட பதிவர்கள் இது "கடல் தண்ணி, இது சாக்கடை "என நொண்டி சாக்கு சொல்லாமல் தங்களுக்கே உரிய பாணியில் விலக்கி கொண்டால் வலைப்பூ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் இன்னும் சிறக்குமே!

கடைசியாக, அறிந்த வகையில் இது சார்ந்து சச்சரவு பதிவுகள் தொடர்கின்றன. என்பதான செய்தி உண்மையில் வருத்தமளிக்கக்கூடியது.
இதை நாசூக்காக சொல்லாமல், கூட்டணி பலத்தால் ஆபாசமான வார்த்தைகளில் ஆவேசத்தை காட்டிய சில பதிவர்களும் தங்களது வருத்தத்தை எழுத்து மூலம் தெரிவித்து இருக்கலாம்.

அனைத்து பதிவர்களும் தங்களை திறமையை படைப்பில் காட்டாமல் காப்பி அடிப்பதிலும், சக பதிவரை திட்டி தீர்ப்பதிலும் 'ஹிட்ஸ்' வாங்க நினைத்தால் வாசகர்களிடம் பிச்சை கேட்பதற்கு சமம்.

பதிவர் பிச்சைக்காராராக வேண்டாம்
பிச்சைக்காரர் பதிவராக வேண்டாம்

Saturday, 23 April 2011

புது வலைப்பூ... என்ன செய்ய வேண்டும்?

வணக்கம். நண்பர்களே! வலைப்பூவில் காலடி எடுத்து வைக்கிறது விமர்சனம். உங்களின் ஆதரவும், ஊக்கமும் தேவை.

வலைப்பூ ஆரம்பித்தால் ஏதாவது சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா?
வலப்பூக்கள் சங்கம் என எதாவது இருக்கிறதா?
எந்த மாதிரி விமர்சனம் செய்யலாம்?