Pages

Tuesday, 26 April 2011

ஜூ.வி - ஐயோ! ஆனந்த விகடனை காணவில்லை

தற்போது கடைகளில் ஜுவி மற்றும் ஆனந்த விகடன் புத்தகங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அது பற்றி எமது செய்தியாளர்  தரும் நேரலை:

பேரு வேண்டாங்க... நெறைய புஸ்தகங்களை எதோ வலைப்பூ கட்றதுக்கு வாங்கிட்டு போறாங்களாம்.சரி.. சாமிக்கு பூ கட்டுவாங்கன்னு நாங்களும்
 மொத்தமா கொடுத்துடுவோம்.எதுக்கு கேக்கிற?

தற்போது கிடைத்த தகவலின் படி சில வலைப்பதிவர்கள் ஜு.வி மற்றும் ஆனந்த விகடனில் வரும் விஷயங்களை அப்படியே , ஈயடிச்ச காப்பி அடித்து போட்டு விடுகிறார்களாம். இதனால்,வாரவாரம் தமிழ்மணத்தில் குறிப்பிட்ட சிலரே முன்னணியில் வருகிறார்களாம். இதனால், சக பதிவர்கள் ஏகத்துக்கும் கோபத்தில் இருக்கிறார்கள்.

சில பதிவர்கள் சொந்த சரக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதாக புலம்பி தள்ளிகிறார்கள். இது தான் இவர்களின் நடை என்றால் பேசாமல் விகடனில் நிருபர்களாக சேர்ந்து விட வேண்டியது தானே! இது மற்றொரு தரப்பினர் வாதம்.

சிலரோ! இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை நாளடைவில் இது 'டப்பா'  வலைப்பூ என ஒதுக்கிவிடுவார்கள் என ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆனால், சிறப்பாக எழுதினாலும், விகடனின் மறுபிரதியில் பெயர் வாங்கினால், வலி இருக்கத்தானே செய்யும்.
சம்பந்தப்பட்ட பதிவர்கள் இது "கடல் தண்ணி, இது சாக்கடை "என நொண்டி சாக்கு சொல்லாமல் தங்களுக்கே உரிய பாணியில் விலக்கி கொண்டால் வலைப்பூ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் இன்னும் சிறக்குமே!

கடைசியாக, அறிந்த வகையில் இது சார்ந்து சச்சரவு பதிவுகள் தொடர்கின்றன. என்பதான செய்தி உண்மையில் வருத்தமளிக்கக்கூடியது.
இதை நாசூக்காக சொல்லாமல், கூட்டணி பலத்தால் ஆபாசமான வார்த்தைகளில் ஆவேசத்தை காட்டிய சில பதிவர்களும் தங்களது வருத்தத்தை எழுத்து மூலம் தெரிவித்து இருக்கலாம்.

அனைத்து பதிவர்களும் தங்களை திறமையை படைப்பில் காட்டாமல் காப்பி அடிப்பதிலும், சக பதிவரை திட்டி தீர்ப்பதிலும் 'ஹிட்ஸ்' வாங்க நினைத்தால் வாசகர்களிடம் பிச்சை கேட்பதற்கு சமம்.

பதிவர் பிச்சைக்காராராக வேண்டாம்
பிச்சைக்காரர் பதிவராக வேண்டாம்

Saturday, 23 April 2011

புது வலைப்பூ... என்ன செய்ய வேண்டும்?

வணக்கம். நண்பர்களே! வலைப்பூவில் காலடி எடுத்து வைக்கிறது விமர்சனம். உங்களின் ஆதரவும், ஊக்கமும் தேவை.

வலைப்பூ ஆரம்பித்தால் ஏதாவது சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டுமா?
வலப்பூக்கள் சங்கம் என எதாவது இருக்கிறதா?
எந்த மாதிரி விமர்சனம் செய்யலாம்?