Pages

Tuesday 26 April 2011

ஜூ.வி - ஐயோ! ஆனந்த விகடனை காணவில்லை

தற்போது கடைகளில் ஜுவி மற்றும் ஆனந்த விகடன் புத்தகங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அது பற்றி எமது செய்தியாளர்  தரும் நேரலை:

பேரு வேண்டாங்க... நெறைய புஸ்தகங்களை எதோ வலைப்பூ கட்றதுக்கு வாங்கிட்டு போறாங்களாம்.சரி.. சாமிக்கு பூ கட்டுவாங்கன்னு நாங்களும்
 மொத்தமா கொடுத்துடுவோம்.எதுக்கு கேக்கிற?

தற்போது கிடைத்த தகவலின் படி சில வலைப்பதிவர்கள் ஜு.வி மற்றும் ஆனந்த விகடனில் வரும் விஷயங்களை அப்படியே , ஈயடிச்ச காப்பி அடித்து போட்டு விடுகிறார்களாம். இதனால்,வாரவாரம் தமிழ்மணத்தில் குறிப்பிட்ட சிலரே முன்னணியில் வருகிறார்களாம். இதனால், சக பதிவர்கள் ஏகத்துக்கும் கோபத்தில் இருக்கிறார்கள்.

சில பதிவர்கள் சொந்த சரக்கு இல்லாமல் இவ்வாறு செய்வதாக புலம்பி தள்ளிகிறார்கள். இது தான் இவர்களின் நடை என்றால் பேசாமல் விகடனில் நிருபர்களாக சேர்ந்து விட வேண்டியது தானே! இது மற்றொரு தரப்பினர் வாதம்.

சிலரோ! இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை நாளடைவில் இது 'டப்பா'  வலைப்பூ என ஒதுக்கிவிடுவார்கள் என ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆனால், சிறப்பாக எழுதினாலும், விகடனின் மறுபிரதியில் பெயர் வாங்கினால், வலி இருக்கத்தானே செய்யும்.
சம்பந்தப்பட்ட பதிவர்கள் இது "கடல் தண்ணி, இது சாக்கடை "என நொண்டி சாக்கு சொல்லாமல் தங்களுக்கே உரிய பாணியில் விலக்கி கொண்டால் வலைப்பூ சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் இன்னும் சிறக்குமே!

கடைசியாக, அறிந்த வகையில் இது சார்ந்து சச்சரவு பதிவுகள் தொடர்கின்றன. என்பதான செய்தி உண்மையில் வருத்தமளிக்கக்கூடியது.
இதை நாசூக்காக சொல்லாமல், கூட்டணி பலத்தால் ஆபாசமான வார்த்தைகளில் ஆவேசத்தை காட்டிய சில பதிவர்களும் தங்களது வருத்தத்தை எழுத்து மூலம் தெரிவித்து இருக்கலாம்.

அனைத்து பதிவர்களும் தங்களை திறமையை படைப்பில் காட்டாமல் காப்பி அடிப்பதிலும், சக பதிவரை திட்டி தீர்ப்பதிலும் 'ஹிட்ஸ்' வாங்க நினைத்தால் வாசகர்களிடம் பிச்சை கேட்பதற்கு சமம்.

பதிவர் பிச்சைக்காராராக வேண்டாம்
பிச்சைக்காரர் பதிவராக வேண்டாம்

11 comments:

மனோவி said...

ம்ம்.. நன்று..
ஒரே வகையில் இரு தவறு செய்கிறார்கள்.
ஒன்று விகடனை நஷ்டப்படுத்துகிறார்கள்..
ரெண்டு பதிவுலகை கேவலப்படுத்துகிறார்கள்..

பொன் மாலை பொழுது said...

///சிலரோ! இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை நாளடைவில் இது 'டப்பா' வலைப்பூ என ஒதுக்கிவிடுவார்கள் என ஆறுதல் கூறுகிறார்கள்.//


இதுதான் சரி,
அவர்களை வாசகர்கள் விரைவில் ஒதுக்கித்தள்ளி விடுவார்கள். இதற்காக சண்டை எல்லாம் போடா தேவை இல்லை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வலைச்சரத்துக்காக தேடிக்கொண்டிருந்த போது உமது ப்ளாக் கண்ணில் பட்டது! புதிய பதிவராச்சே, அறிமுகப்படுத்தலாமா என யோசித்த போது, நீர் வந்ததும் வராததுமாக, சக பதிவர்களை சாடி வைத்திருக்கிறீர்! முதல்ல ஒழுங்கா அவர்களின் முன்னைய பதிவுகளைப் படியும்! அதோட உம்மட திறமைய முதல்ல காட்டும்! நீர் ஒரு பிரபல பதிவராக வந்த பிறகு, ஏனைய பதிவர்கள் பற்றி கதையும்! புரியுதா?

Unknown said...

இப்படி எழுதுவது ஒரு தற்போதைய டிரண்ட் நினைக்கிறேன். இது மாறும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கைவசம் சரக்கு ஏதும் இல்லாமலா 360 பதிவுகள் போட்டிருக்கார்? முன்னணி பதிவரா வந்திருக்கார் ? அவரோட டெய்லி ஹிட்ஸ் என்னவென்று தெரியுமா ? புதுசா வலையுலகுக்கு வருபவர்களை அன்புடன் வரவேற்ப்பது எங்கள் பண்பு! ஆனால் உம்மை அப்படி வரவேற்க முடியவில்லை! நீர் ப்ளாக் ல நின்று நிலைக்கவும் மாட்டீர்!



நீர் முதல்ல சொந்த சரக்கு போடும்!

விமர்சனம் said...

நண்பர் மாத்தி யோசி! அவர்களே!!

அம்பு வந்து விட்டது! எய்தவன் யாரோ?

தங்களது கருத்துக்கு நன்றி!
உங்களை போன்ற 'பிரபல' பதிவர்களின் உள்ள குமறலை உள்ளப்படி கொட்டினால் உண்மையான நிலவரம் புரியும்.

என்ன எழுதியிருக்கிறார்கள் எனபதை கூட படிக்காமல் பின்னூட்டம் போடும் அவசர குடுக்கைகளில் நீரும் ஒருவர் என்பதை மீண்டும் நிருபித்து விட்டீர்கள்.

பாவம்! வலைச்சரம். உம்மிடம் எப்படி வலைச்சரத்தை ஒப்படைத்தார்கள்?

வலைச்சர ஆசிரியரே! மாத்தி யோசிங்கள்...

Muthu Pandi said...

Correct boss

Anonymous said...

Ha Ha Ha ..,

Start Music!

Ithe velaiyaa pochu!!!

Unknown said...

பதிவர்களை பற்றிய பதிவுகள் அதிகம் வரத் துவங்கியுள்ளது ஆரோக்கியமான விஷயம் தான்.

ம.தி.சுதா said...

சகோதரம் எனது வலையில் தங்கள் கருத்தை பார்த்தேன் என் மீது தாங்கள் கொண்ட அக்கறைக்கு மிக்க நன்றிகள்...

எமது யாழ்ப்பாண சுத்த தமிழ் வார்த்தைகள் வெளிக் கொணர்வத எனத இலக்ககளில் ஒன்று அதன்படி தான் மூஞ்சிபுத்தகம் (பேஸ்புக்) போன்ற வாசனங்களை வெளிக் கொணர முயற்சிக்கிறேன் மற்றும்படி எந்த உள் நொக்கமுமில்லிங்க...

Sathish said...

waste of time... better we appreciate others writing skills and be a good participant in tamil blog world.

Post a Comment