Pages

Sunday 1 May 2011

தமிழ்மணம் கடும் அதிர்ச்சி - காப்பி அடித்து சிக்கினர் பிரபலபதிவர்கள்


யார் சிறந்த பதிவர்?
வடிவேலை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் என்ற பதிவு
ஈயடிச்ச காப்பி என்ற விதத்தில் இருவரும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் யார் யாரை பார்த்து காப்பி அடித்தார்கள் என்ற முடிவை வாசகர் இடத்தில் விட்டு விடுகிறோம்.

வேடந்தாங்கல் கருண்-http://sakthistudycentre.blogspot.com/2011/05/blog-post_01.html

விவசாயி -http://kavinthan.blogspot.com/2011/05/blog-post.html

 திறமைக்கு அளவே! இல்லை.

பதிவை எப்படித்தான் பத்து நிமிஷத்தில் காப்பி அடித்தார்களோ! உலகமகா பதிவர் என்ற பட்டம் கொடுக்கிறோம். இனியாவது திருந்துங்க
  
பதிவர்களின் 'பிற'ர் பலத்தை கருத்தில் கொண்டும் முழுப்பெயர்களை ஊகிக்க சில பெயர் டிப்ஸ்:

1.மனோ ரஞ்சித பூ
2.தெரு கவிஞர்
3.நிரந்திர தமிழ்மண தலைவர்
4.பாட்டு ரசிப்பவர்
5. மாத்தி யோசிக்காத பின்னூட்ட அவசரக்குடுக்கை
6.சகதியில் உருளும் சாமி
7. டா போட்டு கால் டி சாப்பிடுவர்
8.காப்பி பேஸ்டில் சரணாலாயம் அமைத்தவர்

இவர்கள் அனைவரும் மறுமொழி என்ற பெயரில் பின்னூட்டப்பகுதியில் அடிக்கும் கூத்து கொஞ்சம் நஞ்சம் அல்ல.இவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது தங்களை குறுக்குவழியில் பிரபலப்படுத்துவது தான்.

இவர்களின் பின்னூட்டப்பகுதியிலிருந்து கீழ்கண்ட முடிவுகள் தொகுக்கப்படுகின்றன

1.இவர்களுக்கு பிறரால் ஓட்டு வரவேண்டியிருக்கிறது.நண்பர்களின் பதிவின் உண்மைநிலையை  விமர்சிப்பதன் மூலம் அது பாழ்பட்டு விடுமோ என்கிற அச்சம்.

2.நண்பர்களை விமர்சனம் செய்வதன்மூலம் அவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வார்கள் என்ற தவறான கணிப்பு

3.குறைகளை வெளிப்படுத்தியப் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர் கடுமையாக தம்மை விமர்ச்சித்தால் அதை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத பரிதாபம்.

4.இது நாள் வரை நன்றாக 'வடை' மற்றும் 'பாயாசம்' போட்ட நண்பர்கள் தம்மை விமர்ச்சிக்க தொடங்கி விடுவார்களோ என்ற பயம்.


இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்...
அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதலாம்...

இதில் யாரையும் கேவலப்படுத்துவது நோக்கம் அல்ல.பின்னூட்டப்பகுதியை கேவலப்படுத்துவர்களைப்பற்றிய விமர்சனம்.

பதிவுலகில் தனிமனித தாக்குதல்,சினிமா,காப்பி பேஸ்ட் என்ற வகையில் ஏதனும் ஒரு வகையில் கடுமையாக விமர்சனத்தை வெளிப்படுத்தவர்கள் மேலே உள்ள பதிவர்கள்.அவர்களின் சொந்த பதிவில் யாருக்கும் தலையிட உரிமையில்லை. அதை விமர்சிப்பது பதிவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும்.அதே சமயத்தில் பின்னூட்டம் என்ற பகுதி குறிப்பிட்ட பதிவிற்காக பிறரின் சுதந்திரமான கருத்துக்கள் பதிவிட பதிவர்களால் அனுமதிக்கப்பட்ட பகுதி.

அந்த கருத்து சுதந்திரத்தில் இவர்களின் இம்சை தரும் வரம்புமீறிய கிண்டலும், கேலியும் தலையிடுவதாக அமையும் போது இந்த பின்னூட்டப்புலிகளுக்கு விமர்சனம் அவசியமாகிறது.

வாசகர்களே! இவர்கள் இனிமேலும் இந்த மோசமான நடைமுறையை கைவிடாவிட்டால் நமது 49 (0) வாக உள்ள தமிழ்மணம் மைனஸ் ஓட்டு இட தயார் ஆகுங்கள்...

இரண்டாம் பகுதி தயாராகிக்கொண்டிருக்கிறது...

18 comments:

நர்மதன் said...

அண்ணே அதெல்லாம் சரி உங்க உண்மையான பெயர் என்ன?

டக்கால்டி said...

ப்ரதர்...என்னைப் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி...குறைக்க முயற்சிக்கிறேன்...

டக்கால்டி said...

நண்பர்களை விமர்சனம் செய்வதன்மூலம் அவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வார்கள் என்ற தவறான கணிப்பு//

நான் சில முறை எடுத்துக் கூறியிருக்கிறேன்...பின்னூட்டம் மட்டறுக்கப்படுகிறது அவர்களது தளங்களில்...இதனால் அவர்களின் மேல் எனக்கு வருத்தமில்லை..என் மனதில் பட்டதை பின்னூட்டத்தில் கூறுகிறேன்...பின்னூட்டத்திலும் கருத்துக்களை எல்லா நேரங்களிலும் சீரியசாக சொல்ல நான் விரும்பவில்லை.பதிவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் விதமாக தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துகள்...

Also please remove word verification for comments..

டக்கால்டி said...

அந்த கருத்து சுதந்திரத்தில் இவர்களின் இம்சை தரும் வரம்புமீறிய கிண்டலும், கேலியும் தலையிடுவதாக அமையும் போது இந்த பின்னூட்டப்புலிகளுக்கு விமர்சனம் அவசியமாகிறது.//

யாரும் யாருடைய வரம்பையும் மீறியதாக எனக்கு தோன்றவில்லை...நீங்கள் உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ள அனைவருமே இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை... நாங்கள் கிண்டலடிப்பதை கிண்டலடிக்கப்படும் நபரே (நான் உட்பட)அதை நினைத்து வருந்தியதில்லை.இதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா நல்ல நக்கல் பதிவு. பின்னூட்டம் என்பது சும்மா ஜாலிக்கு.. அதை லைட்டா எடுத்துக்கனும்.மொய்க்கு மொய் என்பது தமிழர் பண்பாடு தானே? அதில் தவறில்லை..

நிரூபன் said...

1.மனோ ரஞ்சித பூ
2.தெரு கவிஞர்
3.நிரந்திர தமிழ்மண தலைவர்
4.பாட்டு ரசிப்பவர்
5. மாத்தி யோசிக்காத பின்னூட்ட அவசரக்குடுக்கை
6.சகதியில் உருளும் சாமி
7. டா போட்டு கால் டி சாப்பிடுவர்
8.காப்பி பேஸ்டில் சரணாலாயம் அமைத்தவர்//

சகோ, இதில் ஒரு சில பெயர்கல் புரியவில்லையே, விளக்க முடியுமா.

நிரந்தர தமிழ் மண தலைவர்? அவர் யார் என்று என் மர மண்டையால் ஊகிக்க முடியவில்லை சகோ.

அப்புறம் சகதியில் உருளும் சாமி.
இவரும் யார் என்று அறிய முடியலை.
கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா

ராஜ நடராஜன் said...

ம் என்று சொன்னாலே எம்பிக் குதித்து 50 வரி கருத்து சொல்கிறவன் நான்.எல்லோரும் அதே மாதிரி இருக்க வேண்டியது அவசியமா என்ன?அல்லது அதற்கான கால அவகாசங்களும் அமைந்து விடுமா?

தங்கள் நண்பர்கள் வட்டத்துக்குள் கும்மியடிக்கவோ,விளையாட்டாகவோ எதையாவது நோண்டி வைத்தால் ஸ்க்ரோல் செயய வேண்டியது உங்க வேலைன்னு நினைக்கிறேன்.

உம்மணா மூஞ்சியா 300 பேர் எட்டிப்பார்த்துட்டு ஒன்னுமே சொல்லாம போவதை விட கும்மியில 50,100 என்று கிண்டலும்,கேலியுமாக இருப்பதை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

நீங்க டீ சாப்பிடறவர்ன்னு விடுகதை போட்டும் வேர்ட் வெரிபிகேசனை எடுங்கன்னு நட்பாகத்தானே சொல்கிறார்:)

அவர் சொல்லிக் கேட்கமாட்டீங்கன்னா இப்ப நானும் சொல்றேன்:)

பாட்டு ரசிகன் said...

வாழ்க வளமுடன்..

பாட்டு ரசிகன் said...

உங்களுக்காக ஒரு பதிவு
முடிந்தால் இதை படித்து விட்டு ஒரு விமர்சனம் கொடுங்கள்..
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

இராஜராஜேஸ்வரி said...

தொடர்பதிவு தொடர வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

உங்கள் உண்மையான பெயர் என்ன அண்ணாச்சி?இப்படி பெயர்களை விளக்கிச்சொன்னால் தானே எனக்குப் புரியும் தமிழ் மணத்தில் யாரையா நிரந்தர தலைவர் என்பதிவையும் இனைக்க வழிமுறை கேட்கலாம் சொல்லுவீர்களா?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றிங்ணா.......!

சக்தி கல்வி மையம் said...

நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம்...

Prabu Krishna said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை....

comment க்கு word verification எடுத்து விடவும்...

siva said...

Above mentioned blog writters are talented in their own thinking and writting.They have become famous from their own posts itself."Blog" and "Pinnoottam" are the place to share messages between bloggers(may or may not be friends) and blog readers(may or may not be friends).why the need of serious vimarsanam?

சாய்ரோஸ் said...

நல்லதொரு அலசல்தான். அருமையான விவாதக்களமாக வேண்டிய ப்ளாக்கர்ஸ் பகுதிகள் நக்கலும் நையாண்டித்தனமுமாக வெறும் விளையாட்டான பொழுதுபோக்குத்தளமாக மாறிக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதானா? இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை... சமீபத்தில் ஒருவரின் ப்ளாக்கரில் ஒரு வரி படித்தேன்... ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு ப்ளாக்கரில் எழுதுவோர் சங்கம் என்று கிண்டலடித்திருந்தார். உருப்படியான பதிவுகள் எழுத காலமில்லையா இது?...ம்ம்ம்... எப்பதான் வெளங்குமோ?

Post a Comment